மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது!

சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது!

சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை மாசி மாதப் பூஜைகளுக்காக இன்று மாலை (பிப்ரவரி 12) திறக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கோயில் நடை திறக்கப்பட்டு சாமி ஐயப்பனுக்கு 5 நாட்கள் விசே‌ஷ பூஜைகள் நடத்தப்படும். அதன்படி, மாசி மாதப் பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5.30 மணிக்குத் திறக்கப்படுகிறது. சபரிமலை கோயில் தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னிலையில் கோயில் மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி கோயில் நடையைத் திறந்துவைத்தார். இரவு 10.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்காகக் கோயில் நடை திறந்திருக்கும். வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

நாளை (பிப்ரவரி 14) முதல் வருகிற 17ஆம் தேதி வரை தினமும் காலை 4 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டுப் பூஜைகள் நடைபெறும். இரவு 7 மணிக்குப் படி பூஜை நடைபெறும். மேலும், களப பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ர கலச பூஜை ஆகிய பூஜைகள் நடைபெறும். பிப்ரவரி 17ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு கோயில் நடை அடைக்கப்படும்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon