மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

சேரனின் செகண்ட் இன்னிங்க்ஸ்!

சேரனின் செகண்ட் இன்னிங்க்ஸ்!

தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம் என பிஸியாக இயங்கிவந்த இயக்குநர் சேரன், மீண்டும் நடிப்பிலும் இயக்கத்திலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப் எனப் பல வெற்றிப் படங்களைத் தந்த சேரன், பொக்கிஷம் படத்திற்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்தவர் கடைசியாக ‘ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை’ என்ற படத்தை இயக்கினார். இந்தப் படம் தோல்வியைத் தழுவியது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பு, இயக்கம் என இரண்டிலும் களமிறங்கியிருக்கிறார்.

மழை படத்தை இயக்கிய ராஜ்குமார் இயக்கவுள்ள புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். எமோஷனல் த்ரில்லர் படமாக உருவாகவிருக்கும் இதற்கு எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதோடு சேரன் ஒரு படத்தை இயக்கி நடிக்கவிருக்கிறார்.

இது குறித்து பிஹைண்ட் வுட்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில், “கடந்த வருடமே இரண்டு படங்களைத் தொடங்கவிருப்பதாக அறிவித்திருந்தேன். அதில் ஒரு படத்தை வரும் ஏப்ரல் மாதம் துவங்கவிருக்கிறேன். அந்தப் படத்தில் முன்னணி ரோலில் நடிக்கிறேன். மற்ற நடிகர், நடிகைகளுக்கான தேர்வு நடைபெற்றுவருகிறது. தம்பி ராமையா, எம்.எஸ். பாஸ்கர், சுகன்யா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்” எனக் கூறியுள்ளார்.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon