மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 12 பிப் 2018

விஜய் - சூர்யா எமோஷனல் ஹீரோஸ்: நிக்கி கல்ராணி

விஜய் - சூர்யா எமோஷனல் ஹீரோஸ்: நிக்கி கல்ராணி

நடிகர்கள் விஜய்யும் சூர்யாவும் எமோஷனல் ஹீரோக்கள் என்று வெளிப்படையாகப் பேசியுள்ளார் நடிகை நிக்கி கல்ராணி.

ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த கலகலப்பு 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களை விட தாசில்தார் வேடத்தில் நடித்த நிக்கி கல்ராணி கதாபாத்திரமே படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இந்த நிலையில் அவர் இந்தப் படத்தில் நடித்தது குறித்தும் தனது திரையுலக அனுபவங்கள் குறித்தும் பிஹைண்ட் வுட்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

‘தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ என்றால் அது அஜித் சார் தான்’ எனக் கூறிய நிக்கியிடம், ‘அப்போ எமோஷனல் ஹீரோன்னா யாரைச் சொல்வீர்கள்?’ எனக் கேட்டபோது, “விஜய் சாரும் சூர்யா சாரும் தான். விஜய் சாரோட நிறைய படங்கள்லயும், சூர்யா சாரோட பல படங்கள்லயும் அதை நான் பார்த்திருக்கிறேன்” என்றார்.

“இந்தப் படத்தில் நடித்தது ஷூட்டிங் மாதிரி தெரியல, ஹாலிடே மாதிரி ரொம்ப ஜாலியாக இருந்தது” எனப் படத்தில் நடித்தது குறித்து பகிர்ந்த அவரிடம், ‘அப்படின்னா ஜாலி ஹீரோ யார்?’ எனக் கேட்கையில் ரொம்பவும் யோசித்தவர், “கார்த்தி சார் ஃபர்ஸ்ட். அப்புறம் சிவகார்த்திகேயன் சார். அப்புறம் இந்தப் படத்தில நடிச்ச சிவா சார்” எனத் தனிப்பட்டு ஒருவரைக் குறிப்பிடாமல் வரிசைப் படுத்தியதுடன் தனது திரையுலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

நிக்கி கல்ராணிக்கு, ஜீவாவுடன் ஜோடி சேர்ந்திருக்கும் கீ மற்றும் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடித்திருக்கும் பக்கா ஆகிய இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளிவரவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 12 பிப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon