மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

கவனம் ஈர்த்த இளம் வீரர்கள்!

 கவனம் ஈர்த்த இளம் வீரர்கள்!

நியூசிலாந்தில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று (ஜனவரி 13) தொடங்கியது.

மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில் அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன. முதல் நாளாகிய இன்று நான்கு போட்டிகள் நடைபெற்றன.

முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் பாப்வா நியூ கூனி அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாவே அணி வீழ்த்தியது. மூன்றாவது போட்டியில் நபியா அணியை வங்கதேச அணி வீழ்த்தியது. நான்காவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை, நியூசிலாந்து அணி வீழ்த்தியது.

நாளை (ஜனவரி 14) நடைபெறும் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோத உள்ளது.

இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாவின் மகன் ஆஸ்டின் வா, தென்னாப்பிரிக்க அணியில் இடம் பெற்றுள்ள முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மக்காயா நிடினியின் மகன் தாந்தோ நிடினி இருவரும் தேர்வாளர்களின் கவனத்தை மட்டுமின்றி ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

இலங்கை அணி வீரர் கமின்டு மென்டிஸ், இந்திய வீரர் ப்ரித்வி ஷா, ஆப்கானிஸ்தான் அணி பஹிர் ஷா ஆகியோரும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளனர்.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon