மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

கங்கனாவின் புதிய சொகுசு பங்களா!

கங்கனாவின் புதிய சொகுசு பங்களா!

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் 30 கோடி ரூபாய் செலவில் புதிய பங்களா ஒன்றை கட்டியிருக்கிறார்.

தமிழில் “தாம் தூம்” திரைப்படத்தில் நடித்த கங்கனா தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 2013ம் ஆண்டு வெளியான குயின் திரைப்படம் அவரது நட்சத்திர அந்தஸ்தை பல மடங்கு உயர்த்தியதன் மூலம் இவருடைய சம்பளம் ஐந்து கோடிகளை தாண்டி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் கங்கனா ரணாவத் 30 கோடி ரூபாய் செலவில் புதிய பங்களா ஒன்றை கட்டியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் கங்கணா, தனது சொந்த ஊரான இமாச்சலபிரதேசத்தில் உள்ள மணாலியில் இந்த சொகுசு பங்களாவை கட்டியுள்ளார். பங்களா கட்டியுள்ள இடத்தினை 10 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ள கங்கனா 20 கோடி ரூபாய் செலவில் வீட்டை கட்டியுள்ளார்.

வீட்டில் சாப்பிடும் அறை, உடற்பயிற்சி கூடம் என தனித் தனியே அமைக்கப்பட்டுள்ளதோடு மொத்தம் 8 படுக்கையறைகளும், இமயமலையை வீட்டில் இருந்தே காணும் வகையில் மாடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையிலிருந்தும் பால்கனிக்கு செல்லும் வகையில் வழி செய்யப்பட்டுள்ளதோடு வீட்டின் வெளிப்புறம் முழுவதும் கண்ணாடியினால் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பங்களாவின் விதவிதமான புகைப்படங்களை கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon