மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 13 ஜன 2018

சென்னை அணியின் வெற்றி தொடருமா?

சென்னை அணியின் வெற்றி தொடருமா?

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் இன்றைய (ஜனவரி 13) லீக் ஆட்டத்தில் சென்னையின் எஃப்.சி - புனே சிட்டி அணிகள் மோதவுள்ளன.

இந்தியன் சூப்பர் லீக் தொடரின் நான்காவது சீசன் கடந்த நவம்பர் (2017) மாதம் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இரண்டாவது சீசனில் கோப்பையை வென்ற சென்னை அணி மூன்றாவது சீசனில் இரண்டாவது இடத்தைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாகத் தற்போது நடைபெற்றுவரும் நான்காவது சீசனில் தொடர்ச்சியாகச் சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறி உள்ளது.

இன்று நடைபெறும் போட்டியில் புனே அணியுடன் மோத உள்ள சென்னை அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற வாய்ப்புள்ளது. இதற்கு முன்னர் இந்த சீசனில் சென்னை அணி, புனே அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டு 1-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இன்று சென்னையில் நடைபெறவிருக்கும் போட்டியில் மீண்டும் இவ்விரு அணிகளும் மோதவுள்ளதால் போட்டி மிகுந்த சுவாரஸ்யமாக இருக்கும்.

சனி, 13 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon