மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

பிட்காயினுக்குப் போட்டியாக ஜியோ காயின்!

பிட்காயினுக்குப் போட்டியாக ஜியோ காயின்!

கிரிப்டோ கரன்ஸி எனப்படும் ரகசிய நாணயங்களை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிட்காயின்களில் முதலீடு செய்வது தொடர்பான செய்திகள் சமீபமாகவே இணையதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன. இந்தியாவின் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி கிரிப்டோ கரன்ஸியையும் விட்டுவைக்கவில்லை. முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் தலைமையில் 50 தொழில்நுட்பவியலாளர்கள் கொண்ட குழு இந்த ரகசிய நாணயத் திட்டத்தைச் செயல்படுத்தும் பணியில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. பிட்காயினைப் போல பிளாக் செயின் எனப்படும் தொழில்நுட்பத்தை அடக்கிய வகையில் ‘ஜியோ காயின்’ என்ற பெயரில் இந்த ரகசிய நாணயம் வெளியாகவுள்ளது.

தென் கொரியா உள்ளிட்ட சில நாடுகளில் பிட்காயினைத் தடை செய்த பிறகு அதன் மதிப்பு பல மடங்கு சரிந்த நேரத்தில் ஜியோ காயின் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் பிட்காயினில் முதலீடு செய்வதென்பது அரசால் அங்கீகரிக்கப்படாத ஒன்றாகவே இருக்கிறது. மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி, பிட்காயினில் முதலீடு செய்வது தனிநபரின் சொந்த விருப்பமாகும். அதில் அரசுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. இதில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லை என்று கூறியிருக்கிறார். இதுபோன்ற சூழலில்தான் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரகசிய நாணயத்தை வெளியிட முன்வந்துள்ளது.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon