மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

கோயம்பேடு சந்தையில் கரும்பு விலை உயர்வு!

கோயம்பேடு சந்தையில் கரும்பு விலை உயர்வு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில் சிறப்பு விற்பனை தொடங்கியுள்ளது. கரும்பு, வாழைப்பழம் தவிர மற்ற காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களால் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளதால் சந்தைக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

பொங்கல் என்றாலே கரும்புக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இந்த ஆண்டின் பொங்கல் பண்டிகைக்காக சென்னை கோயம்பேடு சந்தைக்கு கரும்பு வரத்து அதிகமாக உள்ளது. இச்சந்தையில் மதுரை கரும்பு 1 கட்டு (15 எண்ணிக்கை) 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மற்ற கடைகளில் கரும்பு ஒன்றின் விலை ரூ.25 முதல் ரூ.40 வரை உள்ளது. மஞ்சள் கொத்து ரூ.25 முதல் ரூ.40 வரையிலும், இஞ்சி கொத்து ரூ.100க்கும், சிறு கிழங்கு கிலோ ஒன்று ரூ.50க்கும் விற்கப்படுகிறது.

மஞ்சள் வாழைப்பழம் ரூ.250 லிருந்து ரூ.500 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் மற்ற வாழைப்பழங்களின் விலை உயரவில்லை. பச்சை பழம் கிலோ ஒன்றுக்கு ரூ.40, ஏலக்கி பழம் ரூ.80, செவ்வாழைப் பழம் ரூ.100, மலை வாழைப் பழம் ரூ.120, பூவன் பழம் ரூ.60 மற்றும் வாழைக்காய் ஒன்று ரூ.12க்கும் விற்பனையாகிறது. பொங்கலுக்காகத் தேனி, நாமக்கல், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கரும்புகள் வரத் தொடங்கியுள்ளன.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon