மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 12 ஜன 2018

தினம் ஒரு சிந்தனை: உழைப்பு!

தினம் ஒரு சிந்தனை: உழைப்பு!

கடும் உழைப்பில் செலவழிக்கப்பட்ட ஒருநாள், நல்ல உறக்கத்தைத் தருகிறது. கடும் உழைப்பில் செதுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை, என்றுமே அழியாத புகழைப் பெற்றுத் தருகிறது.

- லியொனார்டோ டா வின்சி (15 ஏப்ரல் 1452 - 2 மே 1519). புகழ்பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டடக் கலைஞர், கண்டுபிடிப்பாளர், பொறியியலாளர், சிற்பி, ஓவியர் மற்றும் பல்துறை மேதை. உலகப் புகழ்பெற்ற தனது ‘தி லாஸ்ட் சப்பர்’ ஓவியத்தை 1495இல் வரையத் தொடங்கி, 1499இல் நிறைவு செய்தார். 1503இல் புகழ்பெற்ற மோனலிசா வண்ண ஓவியத்தைத் தீட்டத் தொடங்கி, மூன்றாண்டுகளில் அதை நிறைவு செய்தார். ஓவியம் உள்ளிட்ட ஒன்பது வகையான கலைகள் குறித்து ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது எழுத்துகளை முகம் பார்க்கும் கண்ணாடி மூலமாகத்தான் படிக்க முடியும் எனக் கூறப்படுகிறது. இவருடைய மோனலிசா மற்றும் தி லாஸ்ட் சப்பர் உள்ளிட்ட மகத்தான படைப்புகள் காலத்தை வென்றது.

வெள்ளி, 12 ஜன 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon