மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

பிரதமருக்கு மன்மோகன் அறிவுரை!

பிரதமருக்கு மன்மோகன் அறிவுரை!

‘பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளை வரும் காலங்களில் தவிருங்கள்’ என்று பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் நேற்று (டிசம்பர் 7) காங்கிரஸ் சார்பில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு துறையைச் சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “பொருளாதாரத்தின் மீது தொடுக்கப்பட்ட நடவடிக்கையால், நவம்பர் 8ஆம் தேதியைக் கறுப்பு தினமாக அனுசரித்து வருகிறோம். மோடி அரசு எடுத்த சில நடவடிக்கைகள் சிறப்பானதாக இல்லை.

பண மதிப்பிழப்பின்போது ஏராளமான கறுப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டுவிட்டது. இந்த நடவடிக்கையால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். புதிய வேலைவாய்ப்புக்களும் உருவாக்கப்படவில்லை.

ஆனால், நாங்கள் எடுத்த எந்த நடவடிக்கையும் ஏழைகளைப் பாதிக்கவில்லை. பண மதிப்பழிப்பு நடவடிக்கையில் ராஜ்கோட் மக்கள் மற்றும் குஜராத் பிரதமர் மோடியை நம்பியது. ஆனால், அவர் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். எனவே, வரும்காலங்களில் பண மதிப்பிழப்பு போன்ற மிகப் பெரிய நடவடிக்கைகளைத் தவிருங்கள்.

காங்கிரஸ் ஆட்சியின்போது ஊழல் விவகாரங்கள் கடுமையாகக் கையாளப்பட்டது. ஆனால், பாஜகவால் அப்படி நடக்க முடியாது. அவர்களது ஆட்சியில் ஊழலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon