மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

தமிழ்ப்படம் 2.0: சீகுவல் படங்களின் எதிரி!

தமிழ்ப்படம் 2.0: சீகுவல் படங்களின் எதிரி!

சி.எஸ்.அமுதன் மற்றும் ‘மிர்ச்சி’ சிவா கூட்டணியில் வெற்றி பெற்ற ‘தமிழ்ப்படம்’ என்ற காலத்தினால் அழியாத படைப்பின் அடுத்த பாகத்துக்குப் பூஜை போடப்பட்டது.

தமிழ் சினிமாவில் இருக்கும் ஸ்டீரியோ டைப் கதைகளையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து இரண்டு மணி நேரம் வைத்து செய்த தமிழ்த் திரைப்படம், தமிழ்ப்படம். இதன் அடுத்த பாகத்துக்கான பூஜை போடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

‘தமிழ்ப்படம் 2.0’வில் நடிக்கும் ‘மிர்ச்சி’ சிவா, சதீஷ், ஐஸ்வர்யா மேனன், சந்தான பாரதி, மனோபாலா உட்பட இயக்குநர் சி.எஸ்.அமுதன் மற்றும் தயாரிப்பாளர் சஷிகாந்த் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்தப் படத்தின் தலைப்பிலேயே சி.எஸ்.அமுதன் இந்த முறை எந்த மாதிரியான படங்களைக் கையிலெடுத்து வறுக்கப் போகிறார் எனத் தெரிகிறது. சீகுவல் படங்கள் என்ற பெயரில் வெளிவந்து ரசிகர்களை ஏமாற்றுகிறவர்களுக்குச் சரியான பதிலாக இந்தப் படம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon