மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படம்!

ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படம்!

இசையமைப்பாளர் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடிக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது

இவர் கதாநாயகனாக நடித்த முதல் படமான ‘மீசைய முறுக்கு’ நல்ல வரவேற்பைப் பெற்றது. தனது வாழ்க்கை படமான அதில், அவரது இசை, இயக்கம், நடிப்பு ஆகிய அனைத்திலும் ரசிகர்களிடம் இருந்து வரவேற்பைப் பெற்றார்.

முதல் படமே நல்ல விமர்சனத்தைப் பெற்றதால், அவரது அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில், ஆதியின் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் பார்த்திபன் இந்தப் படத்தை இயக்குகிறார். பார்த்திபன், இயக்குநர் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். சுந்தர்.சியின் அவ்னி புரொடக்ஷன்ஸ் படத்தைத் தயாரிக்கிறது. ஹாக்கி விளையாட்டைப் பற்றி படத்தின் கதை அமைந்துள்ளதாக பிஹைண்ட் வுட்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் வரும் 14ஆம் தேதி படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு பெரும்பாலும் சென்னை மற்றும் புதுச்சேரியில் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon