மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

ரப்பர் உற்பத்தியில் தட்டுப்பாடு!

ரப்பர் உற்பத்தியில் தட்டுப்பாடு!

சந்தையில் இயற்கை ரப்பர் தட்டுப்பாடு நிலவுவதாக டயர் தயாரிப்புத் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

வாகன டயர் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் சதீஷ் சர்மா கொச்சியில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 5) இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், “2016ஆம் ஆண்டில் டயர் தயாரிப்புக்குத் தேவையான இயற்கை ரப்பர் தட்டுப்பாடு 40 சதவிகிதமாக இருந்தது. தற்போது இந்த நிதியாண்டின் (2017-18) முதல் அரையாண்டிலும் அதே அளவிலான ரப்பர் தட்டுப்பாடு நீடிக்கிறது.

இந்திய டயர் தொழில்துறைக்கு, மொத்த உள்நாட்டு ரப்பர் உற்பத்தியில் 65 முதல் 70 சதவிகிதம் தேவைப்படுகிறது. 2017-18ஆம் நிதியாண்டில் 16 சதவிகித வளர்ச்சியுடன் 8 லட்சம் டன் ரப்பர் உற்பத்தி செய்யும் என்று ரப்பர் வாரியம் மதிப்பிட்டுள்ளது. 2016-17ஆம் நிதியாண்டில் 6 லட்சம் டன் ரப்பர் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் 3.2 லட்சம் டன் ரப்பர் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தின் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இதன் வளர்ச்சி விகிதம் 5 சதவிகிதம் மட்டுமேயாகும்” என்றார். இந்த நிதியாண்டில் 8 லட்சம் டன் ரப்பர் உற்பத்தி செய்ய இரண்டாம் அரையாண்டில் 24 சதவிகிதம் கூடுதலாக உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. இது சாத்தியமா என்பது கேள்விக்குறியே. இதனால் இந்த நிதியாண்டிலும் டயர் உற்பத்திக்குப் போதுமான இயற்கை ரப்பர் உள்நாட்டில் கிடைப்பது அரிதாகியுள்ளதாக டயர் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon