மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

நடிகராகும் இயக்குநர்கள்!

நடிகராகும் இயக்குநர்கள்!

தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் ஒவ்வொருவராக நடிப்பு பக்கம் செல்வது அதிகரித்துள்ள நிலையில் இயக்குநர் சுசீந்திரனும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராம் பிரகாஷ் ராயப்பா. அதன்பின் 2016ஆம் ஆண்டு ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா ஆகியோர் நடிப்பில் போக்கிரி ராஜா படத்தை இயக்கினார். இவர் தற்போது இயக்கும் படம் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’. இந்தப் படத்தின் போஸ்டரை நகைச்சுவை நடிகர் கருணாகரன் நேற்று (டிசம்பர் 7) தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சுசீந்திரனோடு இயக்குநர் மிஷ்கின் மற்றும் விக்ராந்த் ஆகியோரும் இணைந்து நடிக்கவுள்ளனர். மிஷ்கின் ஏற்கனவே நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற படங்களில் நடிகராக தன்னை நிரூபித்துள்ளார். இந்த நிலையில் சுசீந்திரனும் இந்தப் படத்தின் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த களமிறங்கியுள்ளார். கதாநாயகி குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

படத்தின் தலைப்பும், போஸ்டரில் துப்பாக்கியைப் பயன்படுத்தியிருப்பதும் க்ரைம் த்ரில்லர் வகையைச் சேர்ந்த படமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்பற்று பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon