மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

பாட்னா விமான நிலையத்துக்கு ரூ.800 கோடி!

பாட்னா விமான நிலையத்துக்கு ரூ.800 கோடி!

பாட்னா விமான நிலையத்தின் முனையக் கட்டடம் அமைக்கும் பணிக்கு இந்தியா விமானத்துறை ரூ.800 கோடி ஒதுக்கியுள்ளது.

பாட்னாவில் ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையம் இந்திய விமானத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த விமான நிலையத்துக்கு அதிகரித்துவரும் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு மற்றொரு புதிய முனையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் 2018-19ஆம் நிதியாண்டின் தொடக்கத்தில் தொடங்குகிறது. இதன் கட்டுமானப் பணிக்கு இந்திய விமானத் துறை ரூ.800 கோடி செலவிடத் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய விமானத் துறை, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள தகவலின்படி, “பாட்னா விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் அளவை அதிகரிக்கப் புதிதாக ஒரு முனையம் அமைக்கப்படுகிறது. இந்திய முனையம் அமைக்க ரூ.800 இந்தியா விமானத் துறை செலவிடுகிறது. இதன்மூலம் பாட்னா விமான நிலையம் ஆண்டுக்கு 45 லட்சம் பயணிகளைக் கையாளும் திறனைப் பெறும். கூட்ட நெரிசலான சமயங்களில்கூட ஒரு மணி நேரத்துக்கு 2,250 பயணிகளைக் கையாளும் திறனை பாட்னா சர்வதேச விமான நிலையம் பெறும்” என்று தெரிவித்துள்ளது.

தொடக்கத்தில், ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையம் 75,000 பயணிகளைக் கையாளும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டது. அதன்பிறகு பயணிகளின் எண்ணிக்கையைக் கூடுதலாக கையாளும் வகையில் கட்டமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon