மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

ஆசியாவின் செக்ஸி கேர்ள்!

ஆசியாவின் செக்ஸி கேர்ள்!

ஆசியாவின் செக்ஸி பெண்மணி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா.

லண்டனைச் சேர்ந்த ‘ஈஸ்டர்ன் ஐ’ என்ற வாரப் பத்திரிகை ஆசியாவின் செக்ஸியான 50 பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஏற்கெனவே 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருந்தார் பிரியங்கா. ஆனால், சென்ற ஆண்டு தீபிகா படுகோன் வென்றதை அடுத்து தற்போது இந்த ஆண்டு (2017) மீண்டும் பிரியங்கா தேர்வாகியுள்ளார். இதன்மூலம் 35 வயதாகும் பிரியங்கா இந்தப் பட்டியலில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து பிரியங்கா சோப்ரா தன் ட்விட்டர் பக்கத்தில், “இந்தத் தருணத்தில் எனக்கு வாக்களித்தவர்களுக்கும், ஈஸ்டர்ன் ஐ பத்திரிகைக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் பெருமை அனைத்தும் எனது சந்ததியினருக்கும், என்னை வெளிச்சப்படுத்திக் காட்டியவர்களுக்கும் தான் போய்சேர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பிரியங்காவுக்கு அடுத்தபடியாக டிவி நடிகை நியா ஷர்மா இரண்டாவது இடத்திலும், தீபிகா படுகோன் மூன்றாவது இடத்திலும், ஆலியா பட் நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் நடிகை மஹிரா கான் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon