மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

அரசு மருத்துவமனை: நர்சிங் உதவியாளர்கள் புலம்பல்!

அரசு மருத்துவமனை: நர்சிங் உதவியாளர்கள் புலம்பல்!

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 16 கல்லூரிகளில் நர்சிங் உதவியாளர் பட்டயப் படிப்புக்கான வகுப்புகள் நடந்துகொண்டிருக்கிறது. ஆண்டுதோறும் 1,000 பேர் டிப்ளோமோ முடித்துச் செல்கின்றனர். இவர்கள் ஓராண்டு படிப்பின்போதே, அரசு மருத்துவமனைகளில் நர்ஸ்களுக்கு உதவியாளராகக் கூடுதல் பயிற்சியும் எடுக்கின்றனர்.

இப்படிப்பு முடித்தவுடன் அரசு மருத்துவமனையில் வேலை உறுதி என கல்லூரி பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதை நம்பி டிப்ளோமோ நர்சிங் உதவியாளர் படிப்பு முடித்தவர்கள், கடந்த நான்காண்டுகளாக வேலைக் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

“அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, 350 பேருக்கு அரசு மருத்துவமனையில் நர்சிங் உதவியாளர் பணி வழங்கினார். அதற்குப் பின் யாருக்கும் வேலை வழங்கப்படவில்லை. இந்தப் பணி கிடைத்தால் மாத சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். தமிழக அளவில் 4 ஆயிரம் பேர் வரை பாதித்துள்ளோம்” என நர்சிங் டிப்ளோமோ முடித்தவர்கள் புலம்புகின்றனர்.

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon