மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

தினம் ஒரு சிந்தனை: நாடு!

தினம் ஒரு சிந்தனை: நாடு!

பெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு.

- விளாதிமிர் இலீச் லெனின் (22 ஏப்ரல் 1870 – 21 ஜனவரி 1924). ரஷ்யப் புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும் மற்றும் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம் - லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவனரும் ஆவார். ‘லெனின்’ என்பது ரஷ்யப் புரட்சிக்காக அவர் கொண்டிருந்த புனைபெயர்களில் ஒன்று. பின்னாளில் தன்னுடைய உண்மையான ‘விளாடிமிர் உலியனொவ்’ என்கிற பெயரை ‘விளாடிமிர் லெனின்’ என்று மாற்றிக்கொண்டார். தொழிலாளர் விடுதலை இயக்கம் என்பதைத் தொடங்கி ரஷ்யாவில் தொழிலாளர்களிடையே காரல் மார்க்ஸின் கொள்கைகளைப் பரப்புரை செய்தார். ரஷ்யாவில் பொதுவுடைமை அரசை நிறுவுவதற்குப் பாடுபட்டவர்.

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon