மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

வைகை: நான்கு மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவு!

வைகை: நான்கு மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவு!

வைகை ஆற்றை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கில் நான்கு மாவட்ட ஆட்சியர்கள் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையின்போது மதுரை மாவட்டத்தில் தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், குப்பைகளைக் கொட்டுவோருக்கு அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மதுரை கிளை உத்தரவிட்டது.

இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 7) இந்த வழக்கு நீதிபதிகள் வேணுகோபால், தாரணி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில், ‘வைகை ஆற்றின் தூய்மை பணிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 32 லட்சத்து 60 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வைகை ஆற்றை பராமரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்கள் பதில் அளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கை ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon