மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 8 டிச 2017

சினிமா பாணியில் கொலை செய்த சிறுவன்!

சினிமா பாணியில் கொலை செய்த சிறுவன்!

இந்தியாவின் தற்போதைய துரதிருஷ்டவசமான போக்கு என்னவென்றால் கொலை, கொள்ளை என அனைத்துக் குற்றங்களுமே இளைஞர்களால் செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், ஹரியானா மாநிலத்தில் 16 வயது சிறுவன் திரைப்பட பாணியில் பணத்துக்காக ஐந்து வயது சிறுமியைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் சண்டிகரில் 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன், எந்தவொரு சிரமமும் இல்லாமல் குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டுள்ளான். அது தொடர்பாக திரைப்படத்தைப் பார்த்த சிறுவனுக்கு ஒரு யோசனை தோன்றியுள்ளது. அருகிலுள்ள வீட்டின் ஐந்து வயது சிறுமியைக் கடத்தி, ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளான். சிறுமியைத் தேடி பெற்றோர் அலைந்துகொண்டிருந்தனர். அப்போது, சிறுவன் அவர்களைப் போனில் தொடர்பு கொண்டு ரூ.20 லட்சம் கொடுத்தால்தான் உங்கள் மகளைப் பார்க்க முடியும் என மிரட்டியுள்ளான்.

பின்பு, போலீஸில் புகார் அளித்தபோது அந்தச் சிறுவன் தொடர்புகொண்ட செல்போன் எண் மூலம் குற்றவாளி சிறுமி வீட்டின் பக்கத்திலேயே இருப்பது தெரியவந்தது. போலீஸார் சிறுவன் இருக்கும் வீட்டுக்குச் சென்று அவனை கைது செய்தனர். இதுகுறித்து சிறுவனிடம் விசாரித்தபோது, ‘பணம் சம்பாதிப்பதற்காகக் கடத்தினேன். சிறுமி சத்தம் போட்டதால், தான் போலீஸில் மாட்டிக் கொள்வோம்’ என்ற பயத்தில் சிறுமியைத் தண்ணீருக்குள் மூழ்கடித்து கொலை செய்து உடலை மறைத்து வைத்துவிட்டேன் கூறினான்.

இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளி, 8 டிச 2017

chevronLeft iconமுந்தையது