மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், ஓகி புயலினால் மாயமான கன்னியாகுமரி பகுதி மீனவர்களை மீட்கக் கோரியும் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் இன்று (டிசம்பர் 07) ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.

ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் பலர் கடந்த நவம்பர் 02 ஆம் தேதி புயல் காற்றின் வேகத்தால் திசைமாறி இலங்கை எல்லைக்குள் சென்றனர். எல்லை தாண்டிச் சென்றதாகக் கூறி, 137 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்குச் சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (டிசம்பர் 07) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அந்தக் கோரிக்கைகள்:

இலங்கைச் சிறைகளில் நீண்ட நாள்களாக வாடிவரும் மீனவர்களை விடுவிக்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அவர்களது வாழ்வாதாரமான படகுகளை மீட்டுத் தர வேண்டும்.

- ஓகி புயலினால் மாயமான கன்னியாகுமரி பகுதி மீனவர்களை விரைவாக மீட்க வேண்டும்.

- ராமேஸ்வரம் பகுதியில் விசைப்படகு மீனவர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள தேசியக் கடல் புயல் கால சேமிப்பு நிதியை வழங்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளுக்காக நடைபெறும் போராட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மீனவர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் என்.ஜே.போஸ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், மீனவர் சங்கத் தலைவர்கள் ஜேசு, எமரிட், சகாயம் மற்றும் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon