மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

நாச்சியார் வார்த்தையால் பாதிக்கப்பட்டது யார்?

நாச்சியார் வார்த்தையால் பாதிக்கப்பட்டது யார்?

நாச்சியார் படத்தின் டீசரில் இடம்பெற்ற ஆபாச வசனத்தால் பாதிக்கப்பட்ட சாட்சிகளின் பட்டியலை அளிக்க கரூர் குற்றவியல் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

பாலா இயக்கிய நாச்சியார் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. அதற்குக் காரணம் டீசரின் இறுதிக் காட்சியில் ஜோதிகா பேசிய கெட்ட வார்த்தை. இந்த வசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்துவந்த நிலையில் சர்ச்சைக்குரிய வசனத்தைப் பேசிய ஜோதிகா மீதும், படத்தை இயக்கிய பாலா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்தியக் குடியரசுக் கட்சி மாநில அமைப்பாளர் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.

இன்று (டிசம்பர் 7) விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஆபாச வசனத்தால் பாதிக்கப்பட்ட சாட்சிகளின் பட்டியலை அளிக்க கரூர் குற்றவியல் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் இவ்வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. “நாச்சியார் படம் வெளியானதும் டீசரில் இடம்பெற்ற வசனம் குறித்து எழுந்த சர்ச்சைகள் அனைத்திற்கும் விளக்கம் கிடைக்கும். தற்போது அதைப் பற்றி மேலும் பேச விரும்பவில்லை” என ஏற்கனவே ஜோதிகா கூறியது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon