மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

உயிர் தப்பிய கெளதம் மேனன்

உயிர் தப்பிய கெளதம் மேனன்

இயக்குநர் கௌதம் மேனனின் கார் சென்னை அருகே விபத்துக்குள்ளானதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர் கௌதம் மேனன்.

அவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மாமல்லபுரத்திலிருந்து சென்னை நோக்கி தனது காரில் வந்து கொண்டிருந்தார். செம்மஞ்சேரி அருகே வந்தபோது ஆவின் ஜங்ஷன் என்ற இடத்தில், எதிர்சாலையில் டிப்பர் லாரி வந்ததை கவனிக்காமல் காரை திருப்பியுள்ளார். அப்போது லாரியும் கௌதமின் காரும் மோதியதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இருப்பினும் கார் உயர்தரமானது என்பதாலும், விபத்து ஏற்பட்டதும் ஏர் பேக் வெளியே வந்ததாலும் கௌதம் மேனன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்நிலையில் கெளதம் மேனனின் காரை கிண்டி போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு விபத்து குறித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். விசாரணையில் கெளதம் மேனன் தூக்கக் கலக்கத்தில் லாரியை கவனிக்காமல் வண்டி ஓட்டியதே விபத்திற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon