மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

நீ ரசத்தை ஊத்து :அப்டேட் குமாரு

நீ ரசத்தை ஊத்து :அப்டேட் குமாரு

ஆயிரக்கணக்கான மீனவர்களை காணோம், அவங்க உசுருக்கு என்ன ஆச்சுன்னு இப்ப வரைக்கும் தெரியல, சோறு தண்ணியில்லாம குமரி மாவட்டத்துல ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தி உயிர் பிச்சை கேக்குறாங்க. இது எதை பத்தியும் கவலைப்படாம யாரு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை நீ ரசத்தை ஊத்துங்குற மாதிரி ஓட்டு பிச்சை கேட்டுகிட்டு இருக்காங்க. ஓட்டுக்கு தான் மதிப்பு உசுருக்கு இல்லைன்னு நிரூபிச்சுகிட்டே இருக்காங்க. நோட்டை வாங்கிட்டு நாமளும் கம்முன்னு குத்திட்டு வந்துடுறோமுன்னு புலம்பிக்கிட்டு இருந்தேன். அப்ப பார்த்து இந்த நிர்மலா சீதாராமனை பாதுகாப்பு மந்திரியா போட்டதுக்கு அப்புறம் தான் நம்ம மீனவர்களை நம்ம நேவியே சுடுறதும் காணாமப் போய் ஒரு வாரம் கழிச்சும் கண்டுக்காம இருக்குறதும் நடக்குதுன்னு டீ கடையில ஒருத்தர் பேசிகிட்டு இருக்காரு. ரைட்டு மக்கள் சரியான பாதையில தான் போய்கிட்டு இருக்காங்க. அதை எப்ப ரோட்டுல இறங்கி சொல்வாங்கன்னு தான் வெயிட்டிங்.

@Deepan_Offl

ஆர்.கே.நகரில் மக்கள் விரும்பும் மாற்றத்தை பா.ஜ.க மட்டுமே தரும் – தமிழிசை

அக்கோய் நீங்க ஏமாற்றம்னு சொல்லனும் இந்த இடத்துல

@azam_twitz

பைக்கில் பெட்ரோல் இல்லாமலும், பக்கத்தில் பெட்ரோல் பங்குகள் கிடைக்காமலும் சாலையில் பைக்கை தள்ளிக் கொண்டு வரும்போது தான் தெரியும் நாம் இழிவாக பார்த்த "சைக்களின்" அருமை!!!!

@naatupurathan

உம்மூஞ்சி எங்களுக்கு பிடிக்கல, அதனால உன் வேட்புமனு நிராகரிக்கப்படுகிறது!

எதிர்காலங்களில் இப்படியும் காரணங்கள் சொல்லப்படலாம்!

வாழ்க ஜனநாயகம்...

வளர்க தேர்தல் ஆணையம்...

@mekalapugazh

சென்னையில் கார் வாங்குறவன் பணக்காரனல்ல.. கார் நிறுத்த இடமும் வாங்குபவனே பணக்காரன்.

Boopathy Murugesh

டிரெயின்ல லவ் லெட்டர் குடுத்தா கூட ஒன்னும் சொல்ல மாட்டாங்க போல, "பிஸ்கட் எடுத்துகோங்க"ன்னு குடுத்தா மிரண்டு ஓடுதுங்க..

@கருப்பு கருணா

இவ்விடம் மனுக்கள் வாங்குவது,நிராகரிப்பது

சிறந்தமுறையில் மொத்தமாகவும் சில்லறைக்காகவும்..ஸாரி..

சில்லறையாகவும் செய்து தரப்படும்

அணுகவும்

எலக்‌ஷன் " கமிஷன் "

@sheeba_v

எதிர்கட்சி தலைவர் கேள்வி கேட்பார் என்று பயம்!!

ஐடி ரெய்டுக்கு பயம்!!

TTV என்றால் பயம்!!

தொப்பி சின்னம் என்றால் பயம்!!

விஷால் என்றால் பயம்!!

மோடி சொல்வதை செய்யவேண்டுமே என்ற பயம்!!

ஆட்சி எப்போது கவுழும் என்ற பயம்!!

# இவர்கள் எல்லாம் அரசியல்ல இல்லைன்னு யார் அழுதா?

@Kozhiyaar

மழலை மொழி பேசும் மகளின் உதட்டில் ஓரே சொல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஒலியுடன்!!

நேற்றைய 'தோசி' இன்றைக்கு 'த்தோசை'யாய்!!

@HAJAMYDEENNKS

பாஸ்போர்ட் அலுவலகங்களில் காத்துக்கிடக்கும் மக்கள் யூரின் பாஸ் பண்ண கூட ஒழுங்கான கழிவறை இல்லை என்பது தூய்மை இந்தியாவின் மற்றொரு சாதனை...!

@Boopathy Murugesh

பாஜக தேர்தலில் நிக்கிறதெல்லாம், பாகுபலி-2ல தமன்னா நடிச்ச மாதிரி தான்..

10 பைசா பிரயோஜனம் இல்ல, சும்மா நானும் இருக்கேன்னு கடைசில வந்து நிக்கிறது..

@CreativeTwitz

"கல்வியில் தமிழகத்தை யாராலும் மிஞ்ச முடியாது என்ற நிலையை அதிமுக அரசு கொண்டு வரும் " - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி..

ஆமா கம்பராமாயணம் இயற்றிய சேக்கிழார்.... திருக்குறள் இயற்றிது திருஞானசம்பந்தர்.. அப்படிதானே.

@Anbe Selva

போருக்கு 25 ஆயிரம் பேர் வந்தாலும் போதாதா தலைவா, அப்படி என்ன மூன்றாம் உலக போருக்கா வெயிட் பண்ற..

@ajay_aswa

"ஆர்.கே. நகரில் மதுசூதனனை எதிர்ப்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்..

படித்தவர்ன்னு நினைத்தால் செல்லூர் ராஜூ தம்பி மாதிரி பேசுறாரே.

@chithradevi_91

மொட்டைமாடி கூட்டாஞ்சோறு

அம்மாவின் நிலாச்சோறுக் கதைகள்

கண்ணாமூச்சி விளையாட்டு

எல்லாவற்றையும்

களவாடிக் கொண்டன டிவி சீரியல்களும்

ஸ்மார்ட் போன்களும்

@mekalapugazh

கையின் உதவி இல்லாமலேயே மூடிக்கொள்ளலாம் வாயை.. ஆனால் அதற்கு மூளை உதவவேண்டும்..

@chithradevi_91

மாட்ட அடக்கி கெத்து காட்டின தலைமுறை இப்ப தாயம் ஆடி தம்பட்டம் அடிச்சிகிட்டு திரியுதுங்க

@mekalapugazh

எஞ்சினியருக்குப் படித்தவங்களப் பார்த்தா

எங்க வேலை செய்யறன்னு கேட்டகாலம் போய்

வேல செய்யறயான்னு கேட்ட காலமும் போய்..

மௌனமாய் இருக்கும்காலம் இது.

@ansari_masthan

உலகின் புராதான சின்னங்களில் தாஜ்மஹாலுக்கு இரண்டாவது இடம்

மகிழ்ச்சி பக்தாஸுக்கு உள்ள எரியுமே

யோகி மூஞ்ச கொண்டு போய் எங்க வச்சுப்பாரு தெரியலையே ,,,

@azam_twitz

ஒருவர் புல்லட் வண்டியை தண்ணீரை பாய்த்து அடித்து கழுவிக் கொண்டிருந்தார் அதைப் பார்க்குபொழுது ஆற்றில் எருமையை நிற்க வைத்து தண்ணீரை பாய்த்து அடித்து குளிப்பாட்டியதைப் போன்றே இருந்தது!!!

Anbe Selva

பக்கத்துல இருக்கவும் எண்ணூர்ல போயி சீன் போட்டியே குமரி தூரம்னு விட்டியா ஆண்டவரே..

@கருப்பு கருணா

எல்லா மாநிலத்துலயும் ஒரு அரசாங்கம்.நமக்கு மட்டும் டபுள் அரசாங்கம்.குடுத்து வச்சவங்கப்பா நாம்.

ஒன்று நாமே துட்டுவாங்கிக்கிட்டு சூனியம் வச்சிக்கிட்ட அரசு.

இன்னோன்னு மோடியா பார்த்து சூனியம் வச்ச ஆளுநர் அரசு.

ரெண்டு பேரும் ஓகி புயல் பத்தி ஆய்வு நடத்துனா...

ஆளுநர் செய்திய முதல் பக்கத்திலும்

முதல்வர் செய்திய 16 ஆம் பக்கத்திலும் போடுறாங்க பத்திரிகைக்காரங்க.

வாழ்க பத்திரிகா ஆட்சி!

@Anbe Selva

முதுகெலும்பு இல்லாத இந்த மாநில அரசை விமர்ச்சிக்க வேண்டியது அவசியம்தான், ஆனாலும் அதைவிட முக்கியமானது மீனவர்களின் இந்த நிலைக்கு காரணமான மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்புவதுதான்,

கடற் பாதுகாப்பு, புயல் எச்சரிக்கை முதல் இன்றைக்கு கடலில் மிதக்கும் மீனவர்களை கண்டுகொள்ளாதது வரைக்கும் மத்திய அரசின் அலட்சியம்தான். நிர்மலா சீதாராமனே இந்த இனப்படுகொலைக்கு காரணம்.

1000 கோடிக்கும் மேல் மீனவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பிற்கு மத்திய அரசே ஈடு கட்ட வேண்டும்..

மாறாக குமரி பிரிவது கேரளாவுடன் இணைவது தொடர்பாக கோரிக்கைகள் பாஜகவின் திட்டங்களுக்கே துணைபுரியும்..

-லாக் ஆஃப்

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon