மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

ராஜுமுருகன் எதிர்பாராத கூட்டணி?

ராஜுமுருகன் எதிர்பாராத கூட்டணி?

இயக்குநர் ராஜு முருகன் அவரது அடுத்த படத்துக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார்.

குக்கூ, ஜோக்கர் ஆகிய இரு மிகப்பெரும் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து ராஜு முருகனின் மூன்றாவது திரைப்படம் வரலாற்றுத் திரைப்படமாக உருவாகிறது. இத்திரைப்படத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் ஆகிய இருவரை முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க முடிவெடுத்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சமுத்திரக்கனி, சசிகுமார் ஆகிய இருவருமே அவரவர் பேசும் அரசியலின் அடையாளங்களாகத் திகழ்பவர்கள். சமுத்திரக்கனி வார்த்தைகளால் ஒரு உயிரைக் கொல்வது தவறு எனப் பேசுபவர், சசிகுமார் நூறு பேரைக் கொன்றுவிட்டு கொலை தவறென்று பேசுபவர். இவர்கள் இருவரையும் கையிலெடுத்து ராஜு முருகன் எப்படிப்பட்ட படைப்பை உருவாக்கப்போகிறார் என்பதைப் பற்றிக் கேட்க அவரைத் தொடர்புகொண்டோம். ஆனால், மற்றொரு முனையில் பதில் இல்லை. ராஜுமுருகனிடமிருந்து பதில் கிடைக்கும் வரை காத்திருப்போம்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon