மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை!

வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை!

ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆய்வுக் கூட்டம், ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் மும்பையில் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தீர்மானிக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள வட்டி விகிதமே தொடர்கிறது. அதன்படி, வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதம் 6 சதவிகிதமாகவும், ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவிகிதமாகவும், எஸ்.எல்.ஆர் 19.5 சதவிகிதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 5.75 சதவிகிதமாகவும் தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்தக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவர்னர் உர்ஜித், "நடப்பாண்டில் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டில் பணவீக்கம் 4.3, 4.7 சதவிகிதமாக இருக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவிகிதமாக இருக்கும். டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக டெபிட் கார்டுகளுக்கான கட்டணத்தைக் குறைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்.விவசாய கடன் தள்ளுபடி, கச்சா எண்ணெய் மீதான வரி குறைப்பு, பல பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு போன்றவற்றை செய்தால் நிதி பற்றாக்குறை ஏற்படும்" என்று அவர் கூறினார்.

மேலும் பொதுத்துறை வங்கிகளில் மறுமதிப்பீடு பத்திரங்கள் மீதான ரூ.2.11 லட்சம் கோடி ரூபாய் கடன் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த உர்ஜித் படேல், இந்தக் கூட்டத்தில் நிதி உள்ளீடு மட்டுமல்லாமல் மாநில வங்கிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon