மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

அன்புமணி வழக்கு நிலவரம்!

அன்புமணி  வழக்கு நிலவரம்!

அரசு அதிகாரியை மிரட்டியதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கிற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலை பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக சந்தித்தது, தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் அன்புமணி போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் அதிகாரியை பாமக தொண்டர்கள் பணி செய்யவிடாமல் தடுத்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் மீது கொலை மிரட்டல் விடுத்தல், அனுமதியின்றி கூட்டம் கூட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தருமபுரி நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அரசியல் உள்நோக்கத்துடன் தன் மீது தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்புமணி வழக்கு தொடர்ந்தார். தன் மீதான புகாருக்கு எந்த ஆதாரமுமில்லை என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், அன்புமணி மீதான மிரட்டல் வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon