மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

கோலி ஓய்விற்குக் காரணம் திருமணமா?

கோலி ஓய்விற்குக் காரணம் திருமணமா?

பிரபலங்கள் என்றால் வதந்திகள் தானாகத் தொற்றிக்கொள்கின்றன. அதன்படி விராட் கோலியின் திருமணம் பற்றிய செய்தி நேற்று (டிசம்பர் 6) முதல் சமூக வலைதளங்களில் உலவி வருகிறது.

இந்திய அணியின் கேப்டன் பதவியில் சிறப்பாக விளையாடிவரும் கோலி பல்வேறு சாதனைகளை முறியடித்திருக்கிறார். தொடர்ச்சியாகக் கடந்த 48 மாதங்களாக விளையாடிவருவதால் தனக்கு ஓய்வு தேவை என்று கூறி இலங்கை அணியுடன் நடைபெறவிருக்கும் ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இதனைக் காரணமாக வைத்துக்கொண்டு சிலர் சமூக வலைதளங்களில் கோலி, தனது நீண்ட நாள் காதலியான பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை டிசம்பர் மாதம் இத்தாலியில் திருமணம் செய்துகொள்ள உள்ளார் என்ற தகவலைப் பரப்பினர். இந்தச் செய்தி உண்மை அல்ல என்றும் இது வதந்தி என்றும் அனுஷ்கா தரப்பில் செய்தியாளர்களைச் சந்தித்த நபர் கூறினார்.

அனுஷ்கா ஷர்மா, விராட் கோலி இருவரும் சமீபத்தில் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாகச் சேர்ந்து வந்து தங்களது காதல் வாழ்க்கையை உறுதிசெய்தாலும், அவர்கள் திருமணம் குறித்த உறுதியான தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon