மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

பணம் கொடுக்கும் ஆன்ட்ராய்டு கேம்!

பணம் கொடுக்கும் ஆன்ட்ராய்டு கேம்!

பெரும்பாலான அப்ளிகேஷன்கள் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டிலும் பயன்படும் வகையில் வெளியாவது வழக்கம். சமீபத்தில் வெளியான HQ Travia என்ற கேம் ஆன்ட்ராய்டு பயனர்களுக்காக வெளியாக உள்ளதாக இன்டெர்மீடியா லேப்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மற்ற கேம் மாதிரி இல்லாமல் இதில் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான பதில் கூறுவதன் மூலம் பயனர்கள் குறிப்பிட்ட தொகையை பரிசாக வெல்ல முடியும். சமீபத்தில் ஐ-ஓஎஸ்-ல் மட்டும் செயல்படும் வகையில் வெளியான இந்த HQ Travia என்ற கேம் விரைவில் ஆன்ட்ராய்டு பயனர்களுக்காக வெளியாக உள்ளது.

இந்த கேம் விளையாட பயனர்களுக்கு குறிப்பிட்ட நேரம் வழங்கப்படுகிறது. இந்தப் போட்டியில் கலந்து கொள்வதன் மூலம் பயனர்களுக்கு 60,000 முதல் 6 லட்சம் வரை பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும். இதுவரை ஐ-போன் பயனர்கள் மட்டும் பயன்படுத்தி வந்த இந்த அப்ளிகேஷன், ஆன்ட்ராய்டு பயனர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பைப் பெறவுள்ளது என வெளியான பின்னர் தெரியவரும்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon