மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

ஆட்கள் தேர்வில் சாம்சங்!

ஆட்கள் தேர்வில் சாம்சங்!

சாம்சங் இந்தியா நிறுவனம் 1,300 பணியாளர்களை 2018ஆம் ஆண்டில் பணிக்கு எடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இன்று (டிசம்பர் 7) பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், " சாம்சங் நிறுவனம் 2018ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள முன்னணி பொறியியல் கல்லூரிகளிலிருந்து 1000 பேரை தேர்வு செய்து பணிக்கு அமர்த்தவுள்ளது. அதேபோல, தொழிற்பயிற்சி நிறுவனங்களில் இருந்து 300 பேரையும் பணிக்கு தேர்வு செய்யவுள்ளது.

பணிக்கு எடுக்கப்படவுள்ள பொறியாளர்களிடம் செயற்கை நுண்ணறிவு குறித்த சிந்தனை, உயிர்த் தொழில்நுட்பம், இயந்திர அறிவு, இணையம் குறித்த சிந்தனைகள், இயற்கை மொழி செயலாக்கம், 5ஜி உள்ளிட்ட நெட்வொர்க் சார்ந்த அறிவு ஆகியவற்றைத் தான் நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கிறது.

குறிப்பாக டெல்லி பொறியியல் கல்லூரி, பி.ஐ.டி.எஸ். பிலானி, மணிபால் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் ஐ.ஐ.டி.ஆகிய கல்லூரிகளில் இருந்து மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சாம்சங் நிறுவனம் இந்தியாவில் மிக நேர்த்தியாக ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 22 வருடமாக இந்தியாவில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்தியாவில் சாம்சங் நிறுவனத்திற்கு மூன்று ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் உள்ளது" என்றார்.

இந்நிறுவனம் 2016ஆம் ஆண்டும் ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக இந்தியாவில் 800 பொறியியல் மாணவர்களையும், 300 தொழில்நுட்ப மாணவர்களையும் பணியில் அமர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon