மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

நடிகையர் திலகம்: ஸ்பெஷல் சர்ப்ரைஸ்!

நடிகையர் திலகம்: ஸ்பெஷல் சர்ப்ரைஸ்!

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவரும் ‘நடிகையர் திலகம்’ திரைப்படத்தின் ஸ்பெஷல் சர்ப்ரைஸ் வீடியோ நேற்று (டிசம்பர் 6) வெளியாகியுள்ளது.

நாக் அஷ்வின் இயக்கும் இந்த படம் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும் உருவாகிவருகிறது. வைஜெயந்தி மூவீஸ் - ஸ்வப்ன சினிமா நிறுவனங்கள் தயாரித்துவருகின்றன. 1950, 60-களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாறு படமாகிறது என்ற தகவல் வெளியான நாளிலிருந்தே எதிர்பார்ப்பு உருவாகிய நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வெளியாகியிருக்கும் வீடியோ எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சாவித்திரியின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷும் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். சமந்தா பத்திரிகையாளராக நடிக்க, அவருக்கு ஜோடியாக விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். சாவித்திரியின் தோழி ஜமுனா கதாபாத்திரத்தில் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து கவனம் ஈர்த்த ஷாலினி பாண்டே நடித்துவருகிறார்.

மிக்கி.ஜே.மேயர் இசையமைத்து வரும் இப்படத்திற்கு டேனி சஞ்செஸ்-லோபெஸ் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு (2018) மார்ச் 29ஆம் தேதி வெளியாக உள்ளதாக வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon