மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

மத்திய அரசுத் திட்டத்தில் வீடுகள்!

 மத்திய அரசுத் திட்டத்தில் வீடுகள்!

மத்திய அரசின் வீடு அமைக்கும் திட்டமான "பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (பி.எம்.ஏ.ஒய்.)" திட்டத்தில் ஹரியானாவில் உள்ள 42,000 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என்று ஹரியானா நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கவிதா ஜெயின் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " ஹரியானாவில் உள்ள 28 நகரங்களில் வாழும் 42,804 குடும்பங்களுக்கு பி.எம்.ஏ.ஒய். திட்டத்தில் வீடு கட்டித் தர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி முதல் கட்டமாக 24,221 வீடுகள் கட்டித் தரப்படும். அடுத்தகட்டமாக 19 நகரங்களில் இரண்டாம் கட்டமாக வீடுகள் கட்டித்தர விரைவில் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்படும்.

புதிதாகக் கட்டப்படும் வீடுகள், ஜே.என்.என்.யூ.ஆர்.எம். முறைப்படி பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும். அதேபோல வீடுகள் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெறுகிறது. இந்தப் பணியை தேசிய கட்டட கட்டுமானக் கழகம் மேற்கொள்கிறது. இந்தப் பணியின் தொடக்கமாக ஃபரிதாபாத்தில் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது" என்றார்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon