மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

அதிகாலை நிலநடுக்கம்!

அதிகாலை நிலநடுக்கம்!

ஜம்மு காஷ்மீரில் இன்று (டிசம்பர் 07) காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது என்று நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால், வீடுகள் லேசாக குலுங்கின. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. இதற்கு முன்னதாக நேற்று (டிசம்பர் 07) இரவு 8.45 மணியளவில் டெல்லி, உத்தராகண்டில் பரவலான நிலநடுக்கம் ஏற்பட்டது. கிழக்கு டெஹ்ராடூனிலிருந்து 121 கி.மீ தொலைவிலும், கடலில் 30 கி.மீ. ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 என்று பதிவாகியுள்ளது. பூமி அதிர்ச்சியினால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் அங்கிருந்தவர்கள் வெளியே ஓடிவந்தனர். சண்டிகர் நகரங்களிலும், பஞ்சாப் மாநிலத்திலும் இந்த பூமி அதிர்ச்சி உணரப்பட்டது.

நிலநடுக்கத்தை உணர்ந்ததாகப் பலர் ட்விட்டரில் பதிவிட்டுவருகின்றனர்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon