மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

களவாடிய பொழுதுகள் : டிசம்பர் ரிலீஸ்!

 களவாடிய பொழுதுகள் : டிசம்பர் ரிலீஸ்!

தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள ‘களவாடிய பொழுதுகள்’ படம் வெளியீட்டுக்கு தயாராகிவருகிறது.

பிரபுதேவாவுக்கு ஜோடியாக பூமிகா நடித்துள்ள இந்தப் படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கருணாமூர்த்தி தயாரித்துள்ளார். படத்தின் பணிகள் மூன்று வருடங்களுக்கு முன்பே முடிந்து திரைக்கு வரத் தயாராக இருந்தது. பைனான்ஸ் பிரச்சினை காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. அதன்பின் தங்கர் பச்சான் வெளியிட முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில், தற்போது பைனான்ஸ் பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வந்து தயாரிப்பாளர் கருணாகரனே படத்தை வெளியிடும் வேலைகளில் இறங்கியுள்ளார். அதன்படி, இப்படம் டிசம்பரில் வெளியாகுமென அவர் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ், சத்யராஜ், கஞ்சா கருப்பு முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத்வாஜ் இசையமைக்க, தங்கர் பச்சான் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். பீ.லெனின் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon