மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

மருத்துவ மாணவர் தற்கொலை முயற்சி!

 மருத்துவ மாணவர் தற்கொலை முயற்சி!

விடுதி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியின் பிசியோதெரபி மருத்துவ மாணவர் விமல் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் விமல். 22 வயதான இவர் சென்னை மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கி 4 ஆம் ஆண்டு பிசியோதெரபி படித்து வருகிறார். இவர் தங்கியிருந்த விடுதி அறைக்கு நேற்று (நவம்பர் 06) மதியம் 3 மணியளவில், அவரது நண்பர் தளபதி அவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது விமல் மயங்கிய நிலையில் இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தளபதி, சக மாணவர்களுக்கு தகவல் கொடுத்தார். உடனே சக மாணவர்கள் ஓடி வந்து, விமலை தூக்கிக்கொண்டு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மயக்க மருந்துகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளதாக மருத்துவமனையில் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், அவர் விடுதிக்குக் கட்டவேண்டிய 20,000 ரூபாய், இன்டர்சிப் கட்டணம் ஆகியவற்றை செலுத்த பணம் இல்லாததால் கடந்த ஒரு மாதமாக விடுதி அறையிலேயே முடங்கி இருந்த விமல் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. தற்போது அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon