மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

ஜெய்க்கு ஜோடி யார்?

 ஜெய்க்கு ஜோடி யார்?

ஜெய் நடிக்கும் புதிய படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பலூன் திரைப்படத்தை தொடர்ந்து ஜெய் நடிக்கும் புதிய படத்தை எத்தன் பட இயக்குநர் சுரேஷ் இயக்குகிறார். இந்த படத்தில் கேத்ரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி ஆகிய மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். படம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பேசிய சுரேஷ், “பாம்புகளை மையமாக வைத்து வித்தியாசமான முறையில் உருவாகவுள்ள இப்படம் 1979ஆம் ஆண்டு கமல், ஸ்ரீப்ரியா நடிப்பில் வெளியான ‘நீயா’ படத்தை ஒத்திருக்கும். ஜெய் ஐ.டியில் பணிபுரிபவராக நடிக்கிறார். மூன்று கதாநாயகிகளில் யார் ஜெய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்பதை இப்போது கூறமுடியாது. ஆனால் மூன்று பெண் கதாபாத்திரங்களும் வலுவாக படைக்கப்பட்டுள்ளது. புதுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாலே திறமைமிக்க இத்தனை நடிகைகளை ஒருங்கிணைத்துள்ளோம். காதலும், த்ரில்லரும் கலந்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

“நடிகர்களின் கால்ஷீட் காரணமாக படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. சென்னை, மதுரை, கேரளாவிலுள்ள சாலக்குடி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறும்” என்றும் சுரேஷ் கூறியுள்ளார்.

ஜெய், கேத்ரின் தெரசா இணைந்து நடித்துள்ள கலகலப்பு 2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon