மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

தங்கம் இறக்குமதி நவம்பரில் சரிவு!

 தங்கம் இறக்குமதி நவம்பரில் சரிவு!

விலையுயர்வு காரணமாக நவம்பர் மாதத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி பகுதியளவு சரிந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்சன் ராய்டர்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான GFMS நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 100.6 டன் அளவிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டின் நவம்பரில் 55 டன் அளவிலான தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தீபாவளி நிறைவடைந்த உடன் தங்கத்துக்கான தேவைக் குறைந்து போனது. மேலும், அதைத் தொடர்ந்த திருமண சீசனில் தங்க நகைகளுக்கான விலை அதிகமாக இருந்ததால் இறக்குமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் தங்கம் பயன்பாட்டில் சீனாவைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் தங்கத்தின் விலைமாற்றம் சர்வதேசச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

நடப்பு டிசம்பர் மாதத்திலும் தங்கம் இறக்குமதி மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2016ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் 50 டன் அளவிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. 2016 நவம்பரில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து டிசம்பரில் அதிகளவிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. தங்க வர்த்தகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் அரசு மேற்கொண்ட முயற்சிகளால் 2017ஆம் ஆண்டில் தங்கம் பயன்பாட்டில் இந்தியா சரிவைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon