மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

வருவாய் வழி தேர்வு!

 வருவாய் வழி தேர்வு!

தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை நாளை (டிசம்பர் 8) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தரா தேவி, “எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு, தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான தேர்வு, டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் தேர்வுக்கான பணிகள் பாதிக்கப்பட்டது. எனவே, தேர்வு தேதி டிசம்பர் 16ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்குப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon