மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

சென்னை திரும்பிய விஜயகாந்த்

சென்னை திரும்பிய விஜயகாந்த்

சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், சிகிச்சை முடிந்த நிலையில் இன்று சென்னை திரும்பினார்.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், கடந்த ஓராண்டாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஏற்கனவே சிங்கப்பூரில் சிகிச்சையும் மேற்கொண்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த், ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். அதன்பிறகு சில வாரங்கள் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதை தவிர்த்த விஜயகாந்த், கடந்த சில மாதங்களாக தேமுதிக பொதுக்குழு, கதிராமங்கலம் போராட்டம், நெடுவாசல் போராட்டம் என மீண்டும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி மருத்துவப் பரிசோதனைக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார்,அவருடன் பிரேமலதா விஜயகாந்தும் உடன் சென்றிருந்தார். ஒரு வாரகாலமாக அங்குள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சையும் மேற்கொண்டார். சிகிச்சை முடிந்தைத் தொடர்ந்து விஜயகாந்த் இன்று காலை சென்னை திரும்பினார். அவருக்கு தேமுதிக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் செய்தியாளர்கள் பேட்டிப் எடுக்க முற்பட்டபோதும், விஜயகாந்த் செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றுவிட்டார். விஜயகாந்த் மலேசியாவில் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டது.

முன்னதாக பத்திரிகையாளர் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் விஜயகாந்துக்கு எதிராக ஆலந்தூர் நீதிமன்றம் விதித்திருந்த பிடிவாரன்டை, சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. இதுகுறித்து விமான நிலைய காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon