மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

ப்ரீமியம் மாடல் வெளியானது!

 ப்ரீமியம் மாடல் வெளியானது!

ப்ரீமியம் மாடல் ஸ்மார்ட்போன்களையே சமீபகாலமாக பயனர்கள் அதிகளவில் விரும்பத் தொடங்கியுள்ளனர். ஆனால் முன்னணி நிறுவனங்களுடைய ப்ரீமியம் மாடல்களின் விலை அதிகமாக இருப்பதால் புதிய நிறுவனங்களை பயனர்கள் இலக்காக கொண்டுள்ளனர்.

அதன்படி சியோமி, ஒன் பிளஸ் ஆகிய நிறுவனங்கள் ஆன்லைனில் குறைந்த விலைக்கே அதிக வசதிகள் கொண்ட ப்ரீமியம் மாடல்களை விற்பனை செய்து, பயனர்களை கவர்ந்து வருகின்றன. ஆனால் சமீபத்தில் அதிகரித்துள்ள ஒப்போ நிறுவனத்தின் விற்பனை ஆன்லைன் விற்பனையாளர்களைக் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

இந்த ஆண்டு ஒப்போ நிறுவனத்தின் விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி சமீபத்தில் வெளியான அதன் F5 என்ற மாடல் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 4GB RAM மற்றும் 32GB இன்டெர்னல் மெமரி கொண்டு வெளியான அந்த மாடலைத் தொடர்ந்து F5 ப்ரீமியம் மாடல் நேற்று (டிசம்பர் 6) மலேசியாவில் வெளியிடப்பட்டது. 6GB RAM மற்றும் 64GB இன்டெர்னல்

மெமரி வசதியுடன் வெளியாகி உள்ள இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் P23 ப்ராசஸ்சர் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

3200 mAH பேட்டரி சக்தியுடன், பின்புற கேமரா 16MP மற்றும் செல்ஃபி கேமரா 20MP கொண்டும் வெளியாகியுள்ளது. இதில் Nougat 7.1 OS உடன் ColorOS 3.2 வழங்கப்பட்டுள்ளது. 6 இன்ச் திரையளவு கொண்ட இந்த மாடல் Full HDயை பயன்படுத்தும் வகையில் உள்ளது. இந்த புதிய மாடல் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon