மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

இதய சிகிச்சை: சபரிமலையில் நவீன கருவிகள்!

 இதய சிகிச்சை: சபரிமலையில் நவீன கருவிகள்!

சபரிமலையில் இதயநோய் சிகிச்சை அளிக்க நவீன கருவிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த மாதத்தில் சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். சபரிமலை கோவிலுக்கு மலையேறி வரும் பக்தர்களில் இதயம் தொடர்பான சிகிச்சை பெறுபவர்கள், டாக்டர்களின் ஆலோசனை பெற்று வர வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுவருகிறது.

கடந்த ஆண்டு பம்பை முதல் சன்னிதானம் வரை, நான்கு அவசர சிகிச்சை மையங்கள் செயல்பட்டுவந்தன. இந்த ஆண்டு அது 15ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து மையங்களிலும் 4 ஊழியர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். மலை ஏறும்போது உடல் தளர்ச்சி போன்ற அசாதாரண நிலை வருவதாகத் தோன்றினால் பக்தர்கள் இந்த மையத்தின் உதவியை நாடலாம்.

நின்றுபோன இதயத்தை மீண்டும் செயல்பட வைக்கும் அதிநவீன, ஏ.இ.டி. (ஆட்டோமேட்டிக் எக்ஸடெர்னல் டிபெபிலேட்டர்) என்ற கருவி, சன்னிதானம் சகாஸ் மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளது. கேரள சுகாதாரத் துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இங்கு 30 பேருக்கு இதய நோய் சிகிச்சை அளிக்கப்பட்டது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon