மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

அரசியல் எண்ணம் இல்லை: சந்தானம்

அரசியல் எண்ணம் இல்லை: சந்தானம்

‘அரசியலில் ஈடுபடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை’ என்று தெரிவித்துள்ளார் நடிகர் சந்தானம்.

விடிவி புரொடக்ஷன்ஸ் சார்பில் விடிவி கணேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’. சேதுராமன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் செவ்வாய் அன்று (டிசம்பர் 5) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சந்தானம், விடிவி கணேஷ், ரோபோ சங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது பேசிய சந்தானம், “நான் சிவகார்த்திகேயனுக்குப் போட்டியாக இருப்பதாகச் சொல்கிறார்கள். நான் எப்போதும் நடிகர் சிவகார்த்திகேயனுக்குப் போட்டியில்லை. அப்படியே போட்டியாக இருந்தாலும் அது ஆரோக்கியமானதாகத்தான் இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்துக்கு சக்க போடு போடு ராஜா படம் போட்டியாக இருக்குமே தவிர, அவருக்கு நான் போட்டியில்லை. விவேக், ரோபோ சங்கர், விடிவி கணேஷ், மயில்சாமி, பவர் ஸ்டார் சீனிவாசன் என ஐந்து காமெடியன்கள் சேர்ந்து நடித்திருக்கும் இந்தப் படம் முழு காமெடி விருந்தாகவே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

சிம்பு மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய கேள்விக்குப் பதிலளித்த சந்தானம், “தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் விமர்சனத்துக்கு சக்க போடு போடு ராஜா இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு பதில் அளிப்பார்” என்று கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து அரசியல் பற்றிய கேள்விக்கு, “அரசியலில் ஈடுபடும் எண்ணம் தற்போதைக்கு இல்லை” என்று பதிலளித்துள்ளார். சக்க போடு போடு ராஜா திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படம் வரும் 22ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon