மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

சிலரை தமிழ் ஆர்வலர்கள்னு சொல்றதா... இல்ல, தமிழ் ஆர்வக்கோளாறு உள்ளவர்கள்னு சொல்றதான்னு தெரியல.

தன்னோட தமிழ் மொழியை சிறப்பா, பெருமிதப்படுத்தறதா நெனச்சி, எந்த அளவுக்கு பல்பு வாங்குறாங்கங்கிறதை நாம வழக்கமா பார்த்துட்டு வரோம்.

ரொம்ம்ம்ம்ப செலவு பண்ணி போஸ்டர்ல்லாம் ஒட்டுவாங்க... ஆனா, உள்ளே அவ்ளோ எழுத்துப்பிழை இருக்கும். ‘லி’ வரவேண்டிய இடத்துல, அது எழுத்துப்பிழைன்னு நெனச்சி ‘ழி’ய பயன்படுத்திருப்பாங்க.

‘முடியலடா சாமி கண்ண கட்டுது’ அப்படீன்னு பலமுறை நமக்குத்தோணும்.

தமிழ் மொழியில இன்ன இன்ன சிறப்பு, அதனால தமிழ் மொழியில் பெயர் வைங்கன்னு சொல்லாம, மற்றொரு மொழிய தாக்கி, தமிழ் மொழிய பெருசா காட்டுற மெசேஜ்லாம் அதிகப்படியா உலாவி வருது. தமிழை வளர்க்கிறதா சொல்லியும், நினைச்சும் சிலர் கடுப்பை ஏற்படுத்தும் மெசேஜ்களை வாட்ஸ்அப்களில் வாரி வழங்கிய வண்ணம் உள்ளனர்.

அதுல ஒண்ணு பார்ப்போமா..

இந்தியைத் தாய்மொழியாக கொண்டவர்கள்... தங்களது பெயரில் இந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை.

முடியவும் முடியாது.

கன்னடா - முடியாது.

தெலுங்கு - முடியாது.

மலையாளம் - முடியாது.

ஏனைய மொழிகள் - முடியாது.

ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டது.

ஆனால், தமிழில்...

தமிழ்,

தமிழ்ச்செல்வி,

தமிழ்ச்செல்வன்,

தமிழரசன்,

தமிழ்க்கதிர்,

தமிழ்க்கனல்,

தமிழ்க்கிழான்,

தமிழ்ச்சித்தன்,

தமிழ்மணி,

தமிழ்மாறன்,

தமிழ்முடி,

தமிழ்வென்றி,

தமிழ்மல்லன்,

தமிழ்வேலன்,

தமிழ்த்தென்றல்,

தமிழழகன்,

தமிழ்த்தும்பி,

தமிழ்த்தம்பி,

தமிழ்த்தொண்டன்,

தமிழ்த்தேறல்,

தமிழ்மறை,

தமிழ்மறையான்,

தமிழ்நாவன்,

தமிழ்நாடன்,

தமிழ்நிலவன்,

தமிழ்நெஞ்சன்,

தமிழ்நேயன்,

தமிழ்ப்பித்தன்,

தமிழ்வண்ணன்,

தமிழ்ப்புனல்,

தமிழ்எழிலன்,

தமிழ்நம்பி,

தமிழ்த்தேவன்,

தமிழ்மகன்,

தமிழ்முதல்வன்,

தமிழ்முகிலன்,

தமிழ்வேந்தன்,

தமிழ்கொடி...

என்று தமிழோடு...

தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும்!

தமிழன் மட்டுமே,

தமிழை மொழி மட்டுமல்லாது உயிராக நேசிக்கிறான்!

அனைவருக்கும் பகிருங்கள்.

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...

பெத்தவங்கள ஏன்?

அம்மா

அப்பான்னு கூப்பிடறோம்?

எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா?

அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு?

அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன?

அ – உயிரெழுத்து.

ம் – மெய்யெழுத்து.

மா – உயிர் மெய்யெழுத்து.

அ – உயிரெழுத்து.

ப் – மெய்யெழுத்து.

பா – உயிர் மெய்யெழுத்து.

தன் குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை.

தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய்

(கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய்.

இந்த உயிரும், மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை.

எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது.

நமது ‘தமிழ்’ மொழியில்தான் இத்தனை அற்புதங்கள் உள்ளன!

மம்மி என்பது பதப்படுத்தப்பட்ட பிணம்.

உஸ்ஸ்ஸ்... இதே மெசேஜை... மூணு வருஷங்களா அனுப்பிக்கிட்டு இருக்காங்க.

#மிடில ;-(

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon