மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

கிறிஸ்துமஸ் தாத்தா இடுப்பெலும்பு கிடைத்ததா?

கிறிஸ்துமஸ் தாத்தா இடுப்பெலும்பு கிடைத்ததா?

புனிதர் நிக்கோலஸ், கிறிஸ்துமஸ் தாத்தா என்றெல்லாம் அழைக்கப்படும் சான்ட கிளாஸின் இடுப்பெலும்பைக் கண்டுபிடித்திருப்பதாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இலினாய்ஸ் பகுதியிலுள்ள புனித மார்தா பெதனி தேவாலயத்தின் பாதிரியார் டென்னிஸ் ஓ நெயிலிடம் இந்த எலும்பு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதுபோல உலகின் பல்வேறு தேவாலயங்களிலிருந்து பெறப்பட்ட 500 எலும்புத்துண்டுகளை வெனீஸ் நகரில் வைத்திருக்கிறார்கள். தேவாலயங்களில் பாதுகாப்பாக வைத்திருக்கப்பட்டிருக்கும் எலும்புகளிலேயே பழைமையான எலும்பாக இவை இருக்கின்றன. அந்த எலும்புகளில் மிகப் பழைமையானவை அனைத்துமே நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதனுடையவை. அந்தளவுக்கு முக்கியமாக பாதுகாக்கப்பட வேண்டிய அந்த எலும்புகள் யாருக்கானவை என்று பார்க்கும்போது அத்தனையும் அப்போது வாழ்ந்த புனித நிக்கோலஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு சொந்தமாக இருக்கலாம் என இந்த இடுப்பெலும்பை ஆராய்ச்சி செய்த டாம் ஹிகாம் தெரிவித்திருக்கிறார்.

மிகப்பெரிய செல்வந்தராக வாழ்ந்த நிக்கோலஸ் மற்றவர்களுக்கு பரிசுகளைக் கொடுத்து அதன்மூலம் உண்டாகும் மகிழ்ச்சியிலிருந்து மனநிறைவு அடையும் குணம் கொண்டவராக இருந்தார் என்றும் அதனாலேயே கிறிஸ்துமஸ்தோறும் அவர் மக்களுக்கு பரிசுப் பொருள்களை வழங்குவார் என்றும் கிறிஸ்துவ மதத்தில் நம்பப்படுகிறது.

1087ஆம் ஆண்டு முதலாகவே புனித நிக்கோலஸின் பாகங்கள், அவரது உடல் புதைக்கப்பட்ட இத்தாலி நாட்டில்தான் இருந்தது. இப்படி கிடைக்கும் தகவல்கள் சுவாரஸ்யமாகவும், எங்களை வெனீஸ் மற்றும் இத்தாலி நோக்கி புறப்பட வைப்பதாகவுமே இருக்கிறது. அங்கு சென்று ஆய்வு நடத்தி, இதுவரை கிடைத்த எலும்புகள் எல்லாமே ஒரே நபருடையதுதான் என்று நிரூபித்துவிட்டால் அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் மற்றோர் ஆராய்ச்சியாளரான டாக்டர் ஜார்ஜஸ் கசன் கூறியிருக்கிறார்.

பேலியோ ஜெனாமிக்ஸ் அல்லது டி.என்.ஏ டெஸ்டிங் மூலமாக ஒரே ஒருவரது எலும்புகள் தானா இவை என்று சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும். ஆனால், இந்த எலும்புக்கான நபர் உண்மையான புனித நிக்கோலஸ் தானா என்பதைச் சொல்ல முடியாது. இதுதான் அது என்று எதையும் நிரூபிப்பதற்கு அறிவியலால் முடியாது. எது இல்லை என்பதை வேண்டுமானால் தெளிவாக அறிவியலின் மூலம் சொல்ல முடியும் என்று கூறுகிறார் டாம் ஹிகம்.

நன்றி: Daily Mail

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon