மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

கிச்சன் கீர்த்தனா - பச்சை தக்காளி புரட்டல்!

கிச்சன் கீர்த்தனா - பச்சை தக்காளி புரட்டல்!

வெங்காயம், தக்காளி இல்லாத சமையலையோ, சமையலறையையோ பார்க்க முடியாது.

விதவிதமாக எதிர்ப்பார்க்கும் மனங்களுக்கு அவற்றை திருப்திபடுத்தும் வகையில் செய்து கொடுக்க துணைப்புரிவது இந்த வெங்காயம் மற்றும் தக்காளியே. எவ்வளவு சுவையாகச் சமையலையோ அல்லது மற்ற காரவகை குழம்பு வகைகளையோ செய்தால், அவற்றை அழகுப்படுத்தி பரிமாற அதன் சுவையும் மதிப்புமே தனி. சரி... அது ஒருபுறம் இருக்கட்டும். தக்காளி தொக்கு, தக்காளி வறுவல் வரிசையில் தக்காளி புரட்டல் ஒன்றையும் செய்து அசத்தலாம் வாருங்கள்!

தேவையானவை:

பச்சை தக்காளிக் காய் - 4, தக்காளிப் பழம் - 1, பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - ஒன்று, மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி, தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லித் தழை – சிறிது.

தாளிக்க:

எண்ணெய் - ஒரு தேக்கரண்டி, கடுகு - கால் தேக்கரண்டி, உளுத்தம்பருப்பு - கால் தேக்கரண்டி.

செய்முறை:

கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளிக் காய் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும். காய் வெந்தவுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி இறக்கவும்.

சாதத்துடன் சாப்பிட புளிப்புச் சுவையுடன் கூடிய பச்சை தக்காளி பொரியல் தயார். கொத்தமல்லித் தழையை தூவி பரிமாறவும்.

(காரம் அதிக விரும்புபவர்கள் பச்சை மிளகாயைக் கூடுதலாகச் சேர்க்கலாம்.)

கீர்த்தனா சிந்தனைகள் :

காரணம் இல்லாமல் வாழ்க்கையில் எதுவும் நடப்பதில்லை. காரணமே சொல்லிக்கொண்டு இருந்தால் வாழ்க்கையில் எதுவுமே நடக்கப் போவதில்லை.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon