மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

ஹெல்த் ஹேமா

ஹெல்த் ஹேமா

மறதி என்பது வயதானவர்களிடையே அதிக அளவில் காணப்பட்டாலும், அது எந்த வயதினரையும் பாதிக்கக்கூடியதே. ஞாபக மறதி என்பது படிப்படியாக மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நினைவில் நிறுத்தல் போன்ற செயல்பாடுகள் குறைவடைந்து வருவதைக் குறிக்கும்.

இந்த ஞாபக மறதிக்கு காரணமாக கூறப்படும் பொதுவான காரணிகள்.

அல்சைமர்ஸ் நோய்,

மூளைக்கான குருதி வழங்கல் பாதிப்படைதல்,

தொற்றுகள்,

நீண்ட கால அதிகரித்த மதுப்பழக்கம்,

மூளைக் கட்டிகள்,

தலையில் ஏற்படும் விபத்துகள்...

உளத்தடுமாற்ற நோயானது உண்மையில், பரிவு நரம்பு மண்டலத்தின் (sympathetic nervous system) அதிகரித்த செயற்பாட்டுடன் தொடர்புடையது. மன அழுத்தம், மனநோய்கள் போன்ற மனநலக் குறைவும், உளத்தடுமாற்றம் மற்றும் முதுமை மறதி ஆகியவற்றிலிருந்து வேறுபடுத்தி அறிய வேண்டிய அறிகுறிகளை அளிக்கலாம். மது போன்றவற்றின் தொடர்ச்சியான பயன்பாடு மற்றும் தொடச்சியான தூக்கமின்மை ஆகியனவும் முதுமை மறதியை ஒத்ததான அறிகுறிகளை ஆரம்பக் கட்டத்தில் தரக்கூடும். சிகிச்சை மூலம், நோய் அறிகுறிகளையும், நோய் அதிகரிப்பதையும் கட்டுப்படுத்தி வைக்க முடியும். நோயாளியை தகுந்த முறையில் பராமரித்தலும் மிகவும் முக்கியமாகும். அது கடினமானதும்கூட. குறுக்கெழுத்துப் போட்டிகள், சிறிய கணிதச் செயற்பாடுகள், விளையாட்டுகள் போன்றவை நோய் அதிகரிப்பதைத் தடுக்கும் பயனுள்ள செயற்பாடுகளாகும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, அதிகளவில் மதுபானம் தவிர்த்தல், புகைப்பிடித்தலைத் தவிர்த்தல், உடற்பயிற்சி, கொழுப்பு குறைந்த ஆகாரம் போன்றவையும் இந்நோயை தவிர்க்க உதவும்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon