மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

அம்பேத்கர் நினைவு நாள்: அனுசரிக்காதது ஏன்?

அம்பேத்கர் நினைவு நாள்: அனுசரிக்காதது ஏன்?

அம்பேத்கர் நினைவு தினத்தை அரசு அனுசரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை திருமாவளவன் முன்வைத்த நிலையில், அரசின் சார்பில் அம்பேத்கர் பிறந்த தினம் மட்டுமே அனுசரிக்கப்படுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.

அம்பேத்கரின் 61ஆவது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், அம்பேத்கர் சிலைக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சென்னை கோயம்பேட்டிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு, விசிக தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவர் செய்தியாளர்களிடம், “அம்பேத்கர் நினைவு நாளில் அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர். ஆனால், இந்த ஆண்டு விளம்பரம் கூட செய்யவில்லை, இதுகுறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்த கேள்வி எழுப்பப்பட்டது, “அம்பேத்கரின் பிறந்த நாள் விழா மட்டுமே அரசு நிகழ்ச்சியாக அனுசரிக்கப்படுகிறது. பிறந்த நாள் அன்றுதான் அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவோம். இதுதான் காலங்காலமாக நடைமுறையில் உள்ள வழக்கம். ஆனால், திருமாவளவன் இதுகுறித்து தெரியாமல் பேசுகிறார்” என்று அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon