மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

பியூட்டி ப்ரியா

பியூட்டி ப்ரியா

“மேடம் உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.”

“ஹாய்... நீங்க திவ்யா தானே?”

“எஸ்க்யூஸ்மி... டைம் என்ன மேடம்?”

“நீங்க இறங்குற அதே ஸ்டாப்பிங்க்கு எனக்கும் ஒரு டிக்கெட் எடுத்து தர முடியுமா?”

இதுபோல பலவிதமா அப்ளிகேஷன் போட்டு மன்மதன்கள் வரிசையில் வருவார்கள். ரதிகளும் கண்டும்காணாதது போல இருப்பார்கள். அதற்கு காரணம்... ஒன்று, தான் நிஜமாகவே ரதியைப் போன்று அழகாக இருப்பது. மற்றொன்று, ரதியைப் போன்று நினைத்துக்கொண்டு அழகுற மேக்கப்பில் மட்டுமே வலம்வருவதை கண்டுபிடித்து விடுவார்களோ என்பது.

சரி... நிஜமாவே ரதிகளாக வலம்வர என்னவெல்லாம் செய்யலாம்?

உருளைக்கிழங்கை நன்றாக ஜூஸாக்கி, அதைத் தழும்புகளில் தேய்க்க வேண்டும். உருளையில் உள்ள சல்பர் மற்றும் பொட்டாசியம் ஆகியவை தழும்புகளைக் குறைக்கும் தன்மை கொண்டவை.

க்ரீம்/ஜெல் தழும்புகளை நீக்குவதற்கென்றே, சில க்ரீம்கள் மற்றும் ஜெல்கள் கடைகளில் கிடைக்கும். அவற்றைப் பயன்படுத்தி வந்தாலும், முகத்திலுள்ள தழும்புகள் மற்றும் வடுக்கள் மறைந்து, உங்கள் முகம் பளிச்சிடும்.

எலுமிச்சை ஒரு சிட்ரஸ் வகை பழமாகும். இதை நீங்கள் முகத்துக்குப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எலுமிச்சைச் சாற்றை தினமும் மூன்று முறை குடித்துவந்தாலும், முகத் தழும்புகள் சிறிது சிறிதாக மறையத் தொடங்கும்.

முகப்பரு வருவதைவிட வந்தபின் அது விட்டுச்செல்லும் தழும்புகள், முக அழகையே பாழ்படுத்தும். தழும்புகள் எளிதில் மறையாது. முகப்பரு என்றில்லாமல் சருமத்தில் காயங்களால் உண்டாகும் தழும்பைப் போக்குவது சற்று கடினம். அவ்வாறு உருவாகும் தழும்புகள் மறைய, காய்ந்த அரச மர பழுப்பு இலைகளைச் சேகரித்து எரித்து கரியாக்கி தூள் செய்துகொள்ளுங்கள். இதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து, இரவில் தழும்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் தழும்புகள் படிப்படியாக மறையும்.

சந்தனம், டீ ட்ரீ ஆயில் சந்தனம், தேயிலை மர எண்ணெய், எலுமிச்சை சாறு ஆகியவை பருக்களை நீக்குவதில் ஆற்றல் வாய்ந்தவையாகும். இவை தழும்புகளை லேசாக்கி எளிதில் மறைய செய்கின்றன.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon