மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

எல்.ஐ.சி: பிரீமியம் தொகை உயர்வு!

எல்.ஐ.சி: பிரீமியம் தொகை உயர்வு!

இந்தியப் பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் பிரீமியம் தொகை இந்த நிதியாண்டின் (2017-18) முதல் அரையாண்டில் 12 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில் பிரீமியம் தொகை மதிப்பு 12.6 சதவிகிதம் உயர்ந்து ரூ.2.50 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நிறுவன முதலீட்டைப் பொறுத்தவரையில் இந்தக் காலகட்டத்தில் எல்.ஐ.சி. நிறுவனம் ரூ.12,374 கோடி லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது 16.3 சதவிகிதம் அதிகமாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.தான் இந்தியச் சந்தையில் அதிகம் முதலீடு செய்த மிகப்பெரிய நிறுவனமாகும். இதன் வளர்ச்சியும் 2016ஆம் நிதியாண்டில் 14 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதுகுறித்து வி.கே.ஷர்மா கூறுகையில், “நாங்கள் வழக்கமான பணியைத் தான் தொடர்ந்து செய்கிறோம். காப்பீட்டுக்கு ஆட்கள் இணைப்பதை மிகத் தீவிரமாகச் செய்யவில்லை” என்றார்.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon