மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 7 டிச 2017

வீக்கெண்ட் மச்சான்!

வீக்கெண்ட் மச்சான்!

‘மின்னலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி பல படங்களை இயக்கியுள்ளவர் கெளதம் மேனன். இவர் தற்போது தனுஷின் என்னை நோக்கிப் பாயும் தோட்டா மற்றும் விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை இயக்குகிறார்.

கெளதம் மேனன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒன்றாக என்டர்டெயின்மெண்ட் மூலம் கார்த்திக் நரேனின் நரகாசூரன் படத்தையும் தயாரித்து வருகிறார். இவற்றுடன் மேலும் ஓர் இணைப்பாக, தற்போது வீக்கெண்ட் மச்சான் எனப் பெயரிடப்பட்டுள்ள வெப் சீரிஸையும் கெளதம் மேனன் தயாரித்துள்ளார்.

சமீர் சுல்தான் இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸில் கிரண் நாயக், சுதாகர், ஷ்ரவன் ராமகிருஷ்ணன், பாலாஜி ராதாகிருஷ்ணன், ஞானம், நிவேதிதா, மது சதீஷ், நமீதா ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநர் ஷமீர் சுல்தானே இசையமைத்துள்ள இந்தத் தொடருக்கு மதன்குண தேவா ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இதன் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இத்தொடரின் முதல் எபிசோட் வருகிற டிசம்பர் 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு யூடியூப்பில் ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 7 டிச 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon